Wednesday, August 03, 2005

 

சுனாமி: ரூ. 700 கோடியில் கடல் சுவர்! தமிழக அரசு திட்டம்

சுனாமி: ரூ. 700 கோடியில் கடல் சுவர்! தமிழக அரசு திட்டம்

ஆகஸ்ட் 01, 2005

சென்னை:

தமிழக கடலோர மாவட்டங்களில் ரூ. 700 கோடியில், 600 கிலோமீட்டர் தொலைவிற்கு சுனாமி தடுப்புச் சுவர் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ஏற்பட்ட சுனாமி அலைத் தாக்குதலுக்கு தமிழக கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகை, கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

இதில் கன்னியாகுமரி, கடலூர், நாகை மாவட்டங்கள் தான் மிகப் பரும் சீரழிவை சந்தித்தன. இதையடுத்து தமிழக அரசு சுனாமி தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்தது. அப்போது கடலோரப் பகுதிகளில் சுனாமி அலைகள் மற்றும் கடல் அரிப்பைத் தடுக்க சுவர் அமைக்கப்படும் என ¬முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

இதுதொடர்பான ஆய்வுப் பணிகளையும் அவர் ¬முடுக்கி விட்டார். சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள கடல் சார் பொறியியல் துறைத் தலைவர் வி. சுந்தர், இதுதொடர்பாக ஆய்வறிக்கை தரும்படி தமிழக அரசால் கேட்டுக் கொள்ளப்பட்டார். சுந்தர் தனது ஆய்வுகளை ¬முடித்து அரசிடம் தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தைப் பொருத்தவரை மொத்த கடற்கரையின் நீளம் 1,076 கி.மீ ஆகும். இதில் 60 கிலோ மீட்டர் பகுதி அரபிக் கடலைச் சார்ந்துள்ளது. மீதமுள்ள கடற்கரை வங்கக் கடலையொட்டி அமைந்துள்ளது.

இந்த 1076 கிலோமீட்டர் தொலைவில், கடலில் நதிகள் கலக்கும் கழிமுகம், சிறு ஓடைகள், சதுப்பு நிலக் காடுகள், மீன்பிடி துறைமுகங்கள், உப்பங்கழிகள், சதுப்பு நிலங்கள் போன்றவை சுமார் 435 கிலோமீட்டர் தொலைவுக்கு அமைந்துள்ளன.

இவை கடற்கரைப் பகுதிகளை ஒட்டி வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பு அரணாக உள்ளன. மீதமுள்ள 641 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே இயற்கை சீற்றத்திற்கு ஆளாகும் பகுதிகளாக உள்ளன.

இதில் ஏற்கனவே 40 கிலோமீட்டர் தூரத்திற்கு தூண்டில் வளைவுகள், கற்குவியல் சுவர்கள், குறடுகள், தடுப்புச் சுவர்கள் ஆகியவை உள்ளன. மீதமுள்ள 601 கிலோமீட்டர் தொலைவு கடற்கரையையும், அதை ஒட்டி வாழும் லட்சக்கணக்கான மக்களையும் காக்க வேண்டியுள்ளது.

சமீபத்தில் ஏற்பட்ட சுனாமி பேரழிவும், இந்த பகுதிக்குள் தான் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த 601 கிலோமீட்டர் தொலைவு கடற்கரையில் சுனாமி பாதுகாப்புக்கு என்ன செய்யலாம் என்பது குறித்து சுந்தர் தலைமையிலான நிபுணர் குழு ஆராய்ந்து வந்தது.

நிபுணர் குழுவின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள்: கடலோரப் பகுதிகளில் சுமார் 695.99 கோடி மதிப்பில் சில பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். ¬முதல் கட்டமாக ரூ. 549.37 கோடியிலும், 2வது கட்டமாக ரூ. 54.36 கோடியிலும், 3வது கட்டமாக ரூ. 92.26 கோடியிலும் பணிகளை நிறைவேற்றலாம்.

குறடுகள் (அதாவது கடலுக்குள் சிறிது தொலைவு வரை சென்று கடற்கரை வரை அமைக்கப்படும் கல் சுவர்), கருங்கல் சுவர்கள், தூண்டில் வளைவுகள், தடுப்புச் சுவர்கள் உள்ளிட்டவற்றை எங்கெங்கு அமைக்கலாம் என்பது குறித்து சுந்தர் விரிவாக விவரித்துள்ளார்.

கடலோரத் தாவரங்களை வளர்ப்பது, மணல் மேடு பாதுகாப்பு, கழிமுகத் துவாரங்களை தூர் வாருவது, கடற் மணற்பரப்பை தூய்மைப்படுத்தி அதன் கட்டமைப்பை வலுப்படுத்துவது என்று பல்வேறு ஆலோசனைகள் இந்த பரிந்துரையில் அடங்கியுள்ளன.

நிபுணர் குழுவின் அறிக்கையைப் பெற்றுள்ள தமிழக அரசு இந்தத் திட்டத்திற்கான நிதியுதவி பெறுவது தொடர்பாக ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி ஆகியவற்றின் அதிகாரிகளோடு ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளது.

Tnanks to :http://thatstamil.indiainfo.com/news/2005/08/01/sea.html
Comments:
ஒரு எரிதம் நீக்கப்பட்டுள்ளது.
 
Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Site Meter