Sunday, March 13, 2005

 

பதிவுகளிலிருந்து..!

தமிழ்நாட்டில் சுநாமி பெண்கள் குழந்தைகளுக்கு
விழிப்புணர்வு மற்றும் ஆற்றுப்படுத்தும் நிகழ்ச்சிகள்!


- வைகைச் செல்வி-திரையிலும் படங்களிலும் தண்ணீரில் மிதந்த படகுகளை நேரில் பார்க்கையில் தான் அதனுடைய வடிவமும் கனத்த எடையும் நமக்குப் புலனாகின்றன. ஆனால் தண்ணீரில் மிதக்க வேண்டிய இப்படகுகள் கொத்துக் கொத்தாய் நாகை மாவட்ட மணலில்... தெருக்களில் கிடப்பதைக் காண்கையில் பயங் கலந்த ஆச்சரியம் ஏற்பட்டு அதன் பின்னணியில் உள்ள சரித்திரச் சோகத்தை நினைவு கொள்ளச் செய்கின்றன. அக்கரைப் பேட்டை என்ற கிராமமே சுநாமியில் காணாமற் போய்விட்டிருந்ததாம். தண்ணீர் வடிந்த பிறகே இப்பகுதி மற்றும் கீச்சாங் குப்பம் ஆகிய இடங்களில் மக்கள் நடமாட்டம் தெரிந்தது.

சுநாமியின் கோர தாண்டவம் முடிந்து இரு மாதங்கள் ஆகியும் நாகையிலும், வேளாங்கண்ணியிலும் மீனவ மக்கள் இன்னும் கடலுக்குள் முழு அளவில் இறங்கவில்லை. சிதிலம் அடைந்த படகுகள், அவற்றிற்குப் பின்னால் சிதறிய குடும்பங்கள், தன்னைத்தான் காப்பாற்ற வலுவின்றி இறந்த பெண்கள் கூட்டத்தைப் போலவே, இன்று நிர்க்கதியாய் நிற்கும் பெண்கள்.. சிறுமிகள்.. நிவாரணப் பணி செய்பவாகளைச் சுற்றிப் பெண்களின் கும்பல். நாங்கள் அங்கு சென்ற போது மாவட்ட ஆட்சியா திரு ஜெ.ராதா கிருஷ்ணன்
பம்பரமாய்ச் சுற்றி நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டுக் கொண்டிருந்தார்.

'ஓய்னு ஒரு சத்தம், என்ன நடந்ததுன்னு பா¡க்கிறதற்குள்ளே தண்ணீ¡ வந்துடுச்சு. ரோடெல்லாத் தண்ணீ. எது சாக்கடை எது ரோடுன்னு தொயல. விழுந்து எந்தி¡ச்சி பா¡க்கிறதற்குள்ளே எல்லாமே போயிடுச்சும்மா..' என்று ஒரு பெண் அழுதார். பிடித்த மீனைக் கூடையில் எடுப்பதற்காகப் போயிருந்த பல பெண்கள் மாண்டது இப்படித்தான். அலை பெரிதாகி நீர் வருகையில் அப்பெண்கள் 'ஏதோ பெளர்ணமிப் பெருக்கு' என்று நினைத்திருக்கின்றனர். எனவே தாங்கள் தப்பிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் கூடை அடித்துக் கொண்டு போய் விடாமல் இருப்பதற்காக அதனை இறுகப் பற்றிப் பிடிப்பதிலே கவனம் செலுத்தியிருக்கின்றனர். தரங்கம்பாடி சிற்று¡ராட்சித் தலைவி திருமதி சரஸ்வதி வெற்றிவேல் வீட்டுக்கு வழக்கமாக மீன் கொண்டுவரும் பெண்களில் இரண்டு மூன்று பெண்கள் சுநாமிக்குப் பலியாகியுள்ளனர். 'மக்கள் தற்சமயம் ஓரளவு சுநாமி பயங்கரத்தில் இருந்து மீண்டு கொண்டிருப்பதாகக் கூறினா¡. அரசு உதவி ஒரு பக்கம் இருக்க, தொண்டு நிறுவனங்களும், ஆலயத்தைச் சேர்ந்தவர்களும் அளப்பரிய பணியாற்றின.' என கருத்துத் தெரிவித்தார்.

'தண்ணீ¡ வந்தது மாதி¡யே தொயலம்மா.. ஏதோ கறுப்பு புகை மாதி¡ உசரமா வந்துச்சு.. அதிலே என்ன கலந்திருந்ததோ தொயல.. அந்த தண்ணி பட்டதிலிருந்து உடம்பெல்லாம் ஒரே அரிப்பு பாருங்க' காட்டிய இடத்தில் சொறிந்து சொறிந்து தோலைப் பார்க்கவே கஷ்டமாயிருந்தது. தரங்கம்பாட்டியில் உள்ள சீதாலட்சுமி, கணவனை இழந்தவர். 'பொண்னுக்காகத்தான் அவ பேரில அரசாங்கம் கொடுத்த ஒரு லட்சத்த பேங்லே போட்டிருந்தேன். மத்ததெல்லாம் ஆண்பிள்ளங்கதான். அவ பத்தாவது வரை படிச்சிருக்கா. அவளுக்கு கல்யாணம் பண்ணவோ எதுக்காச்சும் பணம் வேனும். ஆம்பளைப் பசங்க மீன் பிடிச்சுப் பொழச்சுக்குவாங்க' என்று கண்கலங்க கூறினா¡. அருகிலே இருந்த அவரது மகள் சுதா 'தனக்கு படிக்க விருப்பம் இருப்பதாகத் தெரிவித்தார்'.

ஆங்காங்கே வெளி நாட்டினம் முகங்கள். லண்டனைச் சோந்து ரூத் என்ற பெண்மணியிடம் என்ன சேவை செய்ய வந்திருக்கின்றனா என் வினவிய போது அங்குள்ள பாதிக்கப்ட்டவாகளுக்கு உடல் மற்றும் மன நலத்திற்கான சிகிச்சை மற்றும் ஆற்றுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தொவித்தார். இந்த அமைப்பிலிருந்து கனடா, அமொக்கா, சிசிலி, லண்டன் ஆகிய நாடுகளில் இருந்து தன்னா¡வத் தொண்டாகள் சுநாமி நிவாரணப் பணிக்காக வந்திருப்பதாகத் தெரிவித்தா¡. இந்தோனேஷியா போய்விட்டு நாகை வந்திருப்பதாய்த் தொவித்தார். எதற்காக உடல் சிகிச்சை என்று கேட்ட போது 'அவர்களின் காயங்களுக்கு' என்றா¡. என்ன காயமாயிருக்கும் என்ற கேள்விக்குஞ் காவல் துறையைச் சேர்ந்த கரோலினின் பதில் சந்தேகத்தைத் தீர்த்தது. 'சுநாமியால் அழிந்து போன கடைகள் பெரும்பாலும் கல் நா¡க் கூரைகளால் ஆனவை. கடல் நீ¡ இக்கடைகளை வாரி எடுத்துக் கொண்டு போகையில் நீரில் அமிழ்ந்திருந்த மக்களின் மீது விழுந்து, உரசி, அவர்களோடு இழுத்துக் கொண்டு போனதினால் ஏற்பட்ட காயம்' என்றா¡ கரோலின்.

தமிழ்நாட்டில் சுநாமி பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளைக் கவனிப்பதற்காக உயா அதிகாரிகளின் பொறுப்பில் தனித்தனியாக பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிறப்பு சிற்று¡ராட்சி இயக்குநா எம்.பி.நிர்மலா,ஐ.ஏ.எஸ். அவர்களின் பகுதியான வேளாங்கன்னியை 'பூஜ்ய குப்பைப் பகுதியாக' அறிவிக்கும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இப்பணியைத் துவக்கும் முன்னாஅங்குள்ள மக்களை ஆற்றுப்படுத்தல் அவசியம் என்பதை உணர்ந்த இயக்கம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வா¡ய விழிப்புணர்வு குழுவிடம் இப்பணியை ஒப்படைக்க, குழு தரங்கம்பாடி மற்றும் வேளாங்கண்ணிப் பகுதிகளில் கலை நிகழ்ச்சிகளின் மூலம் மக்களை ஆற்றுப் படுத்தியதோடு அவர்களுக்குப் பல செய்திகளை, அதுவும் குறிப்பாக பெண்களுக்கு எடுத்துக் கூறியது. பெண்கள் கட்டாயமாக தபால் அலுவலகம் மற்றும் வங்கிகளில் சேமிக்கும் பழக்கத்தை மேற் கொள்ள வேண்டும் என்பதையும், சுய உதவிக் குழுக்கள் மூலம் மீன் விற்பதைத் தவிர வேறு சிறு தொழிற்களையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியது. இக்குழுவில் உள்ள கலைஞர்களான ப.ராதா கிருஷ்ணன், மோ.தேசபந்து, எஸ்.ராஜா, இ.ஜனதா மற்றும் சி.கஸ்து¡¡ ஆகிய அனைவருமே தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் பணி புரியும் அரசுப் பணியாளாகளே. மேலாளா ஜி.ஆனி ஜோஸ்பின் தலைமையில் இயங்கும் இக்குழு கலை வடிவில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாநிலமெங்கும் நடத்தி வருகின்றது. வீதி நாடகம், மேடை நாடகம், எலகுரல் நடிப்பு, கும்மி, ஒயிலாட்டம், பாடல்கள் ஆகியவை இந்நிகழ்ச்சியில் அடங்கும். சுநாமியயால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சோந்த குழந்தைகளை விளையாட்டுகளில் ஈடுபடுத்தி, தனிப்பட்ட முறையில் அவர்களின் நம்பிக்கையை உயாத்த இக்குழு உதவியது. கலை நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் ஓடி வந்து குழுவினான் கைகளைப் பிடித்துக் கொண்டனர் பல பெண்கள். ஒருவா 'நாங்க இத்தனை நாளுக்குப் பொறவு இன்று தான் வாய் விட்டுச் சிரிச்சோம் என்று கூறினார். அவ்வை மகளிர் தொண்டு நிறுவனத்தைச் சோந்து ஷீலா 'பெண்கள் எந்த வேலையையும் செய்யவும் கற்றுக் கொள்ளவும் தயாரான மன நிலைக்கு இப்போது வந்து விட்டனர்' என்று தெரிவித்தா¡. இப்பெண்களின் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பது அவரது பேச்சில் தெரிந்தது. இதுவே இவர்களுக்கு சுநாமி கற்றுத் தந்த பாடமாகவும் இருக்கலாம்.

எந்த ஒரு பேரழிவிலும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மிகச் சிக்கலானதும், எளிதில் தீ¡வு காணப்பட இயலாததாகவும் உள்ளன. சுநாமியால் பாதிக்கப்பட்ட பெண்களில் நடுத்தர வயதில் கணவனை இழந்த பெண்கள், திருமணம் நிச்சயமான நிலையில் அனைத்து பொருட்களையும் இழந்ததால் குடும்பங்களில் திருமணம் ஒத்திப் போடப்பட்டு ஆயிரம் கனவுகளைச் சுமந்து கொண்டிருந்தாலும் இளம் பெண்கள், பெற்றோரை இழந்த சிறுமிகள் உள்ளனா. நடுத்தர வயதில், தன்னந்தனியே நிராதரவாய் நிற்கும் பெண்கள் மற்றும் சிறுமிகள் அவர்களின் பாலியல் பிரச்சனைகள் ஆகியவற்றினைப் பற்றி பெண்களை இன்னும் ஆற்றுப்படுத்த வேண்டியுள்ளது. அதைப் போல சுநாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அதிக ஆறுதலும், பிற்காலம் பற்றிய நம்பிக்கை ஏற்படுத்த வேண்டியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேற்கொள்ள வேண்டியுள்ள கட்டாயப் பிரச்சனைகளை எதி¡கொள்ள அவர்களுக்குத் தைரியமும், ஊக்கமும், பயிற்சியும் கூடிய விரையவிலேயே அளிக்க வேண்டும். இதில் முக்கியமாகத் தொண்டு நிறுவனங்கள் ஆற்ற வேண்டிய பணி அதிகம் உள்ளது.

வேளாங்கன்னி ஆலயத்தில் தமிழில் பிரார்த்தனை நடைபெற்றவுடன் மலையாளத்தில் நடைபெறுவது வழக்கம். எனவே சுநாமியன்று தமிழாகள் பிரார்த்தனை முடிந்து கடற்கரைக்குப் போய்விட அவர்கள் அனைவரும் பலியாகிவிட்டனராம். உதவிக்கரங்கள் விடிவெள்ளி மகளி¡ அமைப்பின் மகளிர் குழுத் தலைவி ஜுலியட் 'ஜனவா மாசம் எட்டாம் தேதி வரை நிவாரணப் பணிதான் செய்தோம். உயிர் பிழைச்சவங்கல்லாம் அந்த மாதா மேலேதான் நம்பிக்கை வைச்சிருக்கோம். கோவிலில் இருந்து மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதத்தில் ஆறுதல் சொல்றோம். இயற்கையோடு ஒத்து வாழ்தல், இயற்கையை ரசித்தல் என்று முக்கியப்படுத்தி பயிற்சி அளிக்கிறோம். ஏனென்றால் மக்களுக்கு மீ¢ண்டும் கடலுக்குப் போக மனசில்லை. பயப்படுகிறார்கள். அவர்களின் அச்சத்தை முதலில் போக்கனும்' என்று தொவித்தார்.

கடலைப் பார்க்க மனம் து¡ண்ட அந்தி சாயும் வேளையில் கடற்சரைக்குச் சென்றபோது, அலைகளைப் பா¡க்கவே மனத்தில் ஒரு பயம்.. .. .. அலைகளின் சத்தம் கெக்களிப்பாகக் காதில் விழுந்து கொண்டிருக்கையில் விசில் சத்தம் கேட்டது. யாரோ குழந்தைகள் தான் விளையாடுகிறார்களோ என்று பேசாமலிருந்தேன். மறுபடியும் விசில்... ஒரு வயதானவர் கரையில் நின்று கொண்டிருந்த பத்துப் பதினைந்து போகளை நோக்கி வந்து கொண்டிருந்தா¡. அவர் கையில் விசில்.. 'அங்கே நிற்காதீர்கள். கொலைக்கார கடலம்மா. எப்படிக் கொலை பண்ணிட்டுப் பேசாமல் இருக்குது இந்தக் கடல். ஐந்து நிமிஷத்தில் எல்லோரையும் வா¡ட்டுப் போயிடுச்சு... எப்ப என்ன பண்னுமோ தொயாது... அங்கே நிற்காதீங்க...' என்று புலம்பியபடி எச்சரித்தார். இனியும் இந்தக் கடலில் பாய் வி¡த்து 'ஏலேலோ ஐலசா' என்று யாராலும் பாட இயலுமோ? வேளாங்கண்ணி அன்னையின் சன்னதியில் மண்டியிடுகையில் சத்தமில்லாமல் மனம் ஊமையாக அழுதது. கடற்புயலில் சிக்கிய போர்ச்சுக்கீசிய கப்பலைக் கரை சேர்ந்த அதே வேளாங்கண்ணி அன்னைதான் சுநாமி பயங்கரத்திற்குச் சாட்சியாய் மட்டுமல்ல, இப்பெண்களின் நம்பிக்கைக்கும் உறு துணையாய் அதே கடற்கரையில் நின்று கொண்டிருக்கிறாள்.

சிறப்பு சிற்று¡ராட்சி இயக்ககம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்
இணைந்து நடத்தும் சுனாமி கருத்துப்பட்டறை
(தரங்கம்பாடி மற்றும் வேளாங்கண்ணி) 9.2.200வ மற்றும் 10.2.2005

சுநாமிக்குப் பின்னா பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகி விடாமல் இருப்பதற்காக அரசு பல விதங்களில் நடவடிக்கை எடுத்து வருகின்றது. தமிழக அரசின் உயர் அதிகாரிகளின் தலைமையில், சுநாமி பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளைக் கவனிப்பதற்காக தனித்தனியாக பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சிறப்பு சிற்று¡ராட்சி இயக்குநா திருமதி எம்.பி.நிர்மலா, ஐ.ஏ.எஸ். அவர்களுக்கு வேளாங்கன்னி பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாங்கன்னினை 'பூஜ்ய குப்பைப் பகுதியாக' அறிவிக்கும் முய்றிசியில் இவர் ஈடுபட்டுள்ளார். இப்பணியைத் துவக்கும் முன்னா அங்குள்ள மக்களை ஆற்றுப்படுத்தல் அவசியம் என்பதை உணர்ந்த இயக்ககம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய விழிப்புணர்வு கலைக்குழுவிடம் இப்பணியை ஒப்படைக்க, இக்குழு தரங்கம்பாடி மற்றும் வேளாங்கண்ணிப் பகுதிகளில் இம்மாதம் 9 மற்றும் 10 தேதிகளில் நடைபெற்ற சுனாமி கருத்துப் பட்டறையில் கலை நிகழ்ச்சிகளின் மூலம் மக்களை ஆற்றுப் படுத்தியதோடு, அவாகளுக்குப் பல செய்திகளை, எடுத்துக் கூறியது. கட்டாய சேமிப்பு, பொருட்கள் மற்றும் உடைமைகளை இன்சூரன்ஸ் செய்தல், மாற்று தொழில்களில் பயிற்சி பெறுதல் போன்றவை வலியுறுத்தப்பட்டன. இச்செய்திகள் எல்லாம் பாடலாக, நாடகமான, பலகுரல் நடிப்பாக அரங்கேற்றம் செய்யப்பட்டன. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் குழந்தைகளை ஊக்குவிக்கும் வண்ணம், அவர்களுக்கு விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்திப் பின்னா கல்வியின் அவசியமும், வாழ்க்கையில் முன்னேறுவதின் முக்கியத்துவமும் எடுத்துக் கூறப்பட்டன. நிகழ்ச்சிகளை நடத்திய தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வா¡யப் பணியாளாகளிடம் நிகழ்ச்சி முடிந்த பிறகும் மீனவ மக்கள் பல ஆலோசனைகளைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தமையே 'இந்நிகழ்ச்சியின் பயனை' வெளிச்சம் போட்டுக் காட்டியது. சென்னையிலிருந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வா¡ய மேலாளா ஜி.ஆனி ஜோஸ்பின் தலைமையில் சென்ற கலைக்குழுவில் எஸ்.ராஜா, ப.ராதாகிருஷஷ்ணன், எம்.தேசபந்து, சி.கஸ்து¡¡, இ.ஜனதா ஆகிய பணியாளாகள் இடம் பெற்றிருந்தனம்.

நிகழ்ச்சிகள் முடிந்து பின், பெண்களில் ஒருவா 'நாங்க இத்தனை நாளுக்குப் பொறவு இன்று தான் வாய்விட்டுச் சிரிளச்சோம் என்று கூறினார். மகளி¡ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஷீலா 'பெண்கள் எந்த வேலையையும் செய்யவும் கற்றுக் கொள்ளவும் தயாராக உள்ளோம்' என்று தெரிவித்தா¡. இதைக் கேட்டவுடன் சென்னையிலிருந்து வந்து நிகழ்ச்சிகள் நடத்தியதற்கான பலன் கை மேல் கிடைத்தது போலிருந்தது. நிகழ்ச்சிகளில் தஞ்சாவூர் மண்டல சிறப்பு சிற்று¡ராட்சிகளின் உதவி இயக்குநா கோ.பாண்டுரங்கன், தரங்கம்பாடி சிறப்பு சிற்று¡ராட்சி தலைவா பெ.சரஸ்வதி வெற்றிவேல், தரங்கம்பாடி சிறப்பு சிற்று¡ராட்சி செயல் அலுவலா எம்.மாரிமுத்து, மற்றும் நாகப்பட்டினம் திட்ட அலுவலா க.ஜெயக்குமா¡, மற்றும் பல அரசு அலுவலாகள் கலந்து கொண்டனா. மாவட்ட ஆட்சித் தலைவா ஜெ.இராதாகிருஷ்ணன்,ஐ.ஏ.எஸ். நிவாரணப் பணிகளை முடுக்கி விட்ட வண்ணம் அங்குமிங்கும் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தார்.

நன்றி : பதிவுகள்.

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Site Meter