Tuesday, February 01, 2005

 

சூர்யா பெண்கள் அமைப்பு

மட்டக்களப்பில் உள்ள சூர்யா பெண்கள் அமைப்புடன் சேர்ந்து ஏனைய பெண்கள் அமைப்புக்கள் விடுத்துள்ள அறிக்கை

சுனாமிப் பேரழிவின் பின்னர் ஏற்பட்ட மிகப் பாரதுரமான பிரச்சனைகளுக்கு முகங்கொடுப்பதில் அரச அதிகாரிகள் எதிர் கொள்ளும் பாரிய பிரச்சனைகளிலும் அழுத்தங்களையும் நாம் அறிவோம். எனவேதான மட்டக்களப்பைச் சேர்ந்த பெண்கள் கூட்டணியினராகிய நாம் சுனாமி பேரழிவுப் பிரச்சனைகளை கைக் கொள்ளுகின்ற அரசாங்க அமைப்புக்களுக்கும் ஏனையோருக்கும் எமது நிபுணத்துவத்தையும் ஆலோசனைகளையும் வளங்களையும் தருவதற்கு விரும்புகின்றோம். பிரதேசத்திலுள்ள சகல பிரிவினரும் ஒன்றிணைந்து பணிபுரிய வேண்டிய தருணம் இது எனவும் நாம் கருதுகின்றோம்;.

டிசம்பர் 26ஆம் திகதி சுனாமிப் பேரழிவின் பின் இடம்பெயர்க்கப்பட்ட மக்களின் நலன்கள் தொடர்பாக தற்போது மேற்கொள்ளபபடும் ஒழுங்குகள பற்றிய எமது கருத்துக்களை தங்கள் கவனத்திற்க்கு கொண்டு வருகின்றோம். இடம்பெயர்க்கப்பட்டோரை தற்க்காலிகமாக இன்னோர் இடத்திற்கு மாற்றுவது குறித்து போதுமான அளவு அவர்களுடன் கலந்துரையாடாமலும் அவர்களது விருப்பங்களை கேட்க்காமலும் முடிவுகள் எடுக்கப்படுவதையிட்டு நாம் கவலை அடைகிறோம். உறைவிட வகை தொழில் வாய்ப்புக்கள் சமூக ஆதாரம், பாதுகாப்பு தமது சமூகத்துடனும் (உற்றார் உறவினர்) தமது வீட்டுச் சூழலுடனும் உள்ள உளவியல் நெருக்கம் பற்றிய அவர்களது அபிப்பிராயங்கள் ஆர்வங்கள் ஆகியவற்றை கணக்கெடுத்து எத்தகைய முடிவுகளும் எடுக்கப்படவேண்டும். விசேட தேவைகள், வித்தியாசமான தேவைகள் உடைய பல்வேறு வகையான இடம்பெயர்க்கபட்ட மக்கள் ஒரு முகாமில் தங்கியிருக்கக் கூடும். அத்துடன் இத்தகை வித்தியாசங்கள் பால்நிலை, வயது, கலாச்சார பின்னணி, சமூகப் பொருளாதார அந்தஸ்து, வருமான வழிகள் முதலியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளன. இத்தகைய வித்தியாசமான மக்கட் பிரிவுகளை கலந்துரையாடலின் போது கவனத்தில் எடுத்தல் வேண்டும்.

வித்தியாசமான மக்கள் குழுக்கள் வித்தியாசமான தீர்வுகளை வேண்டி நிற்பர் எனவேதான் மட்டக்களப்பைச் சேர்ந்த பெண்கள் கூட்டமைப்பினராகிய நாம் இடம்பெயர்ககப்பட்ட பெண்களின தற்காலிக, நீணடகால நலன்களுக்கான ஒழுங்குகளைச் செய்யும் போது அவர்களது கருத்துக்கள் கவனத்தில் எடுத்ததுக் கொள்ளப்பட வேண்டும் என அழுத்திக் கூறுகின்றோம்.
பின்வரும் விடையங்களை கவனத்தில் எடுக்க வேண்டும் என தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

* பெரும்பாலும் ஆண்களில் இருந்து வேறுபட்டதும் எமது சொந்த சமூகச் சூழலுடனும் அதன் பௌதீகச் சூழலுடனும் தொடர்பு பட்டதுமான பெண்களது ஜுவனோபாயங்கள் பற்றிய அக்கறை அவர்களுக்கு இன்னோர் இடம் அளிப்பது தொடர்பான முடிவுகள் எடுக்கும் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

* பெண்களுக்கு ஏற்கெனவே பழக்கமானதும் பலமான சமூக வளங்கள் உள்ளதுமான இடங்களில் பெண்களதும் அவர்களது பிள்ளைகளதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் இடங்களாக அமையும். பழக்கமற்ற இடங்களுக்கு இவர்களை மாற்றுவது மிகப் பயங்கரமான பேரழிவிற்குப் பின்னர் அவர்களது உளச்சமூக, உணர்ச்சி நிலையில் எதிர்மறையான மேலதிக அழுத்தங்களை உருவாக்கும். உதாரணமாக தமது பழக்கமான சமயத்தலங்கள், சந்தைகள், ஆஸ்பத்திரிகள், உறவினர், நண்பர்களின் இருப்பிடங்களுக்குச் செல்லக்கூடிய வழிவகைகள் உள்ள பெண்கள் துஷ்பிரயோகம், சுரண்டல், உளவியல் தாக்கம் ஆகியவற்றிற்கு மிகக் குறைவாகவே உட்படுவர்.

* குடும்ப அங்கத்தவர்களை இழந்ததால் குடும்பத்தலைவிகளாக மாறியுள்ள பெண்கள் அவர்களத மீள் இருப்பிடத் தேவைகள், விருப்பங்கள் குறித்து விசேட அக்கறை செலுத்தப்பட வேண்டும்.

* பரிச்சயமற்ற ஆண்களுடன் மிகச் சமீபமாக வாழ்வதில் உள்ள சங்கடம், அச்சம் ஆகியவற்றை முகாம்களில் வாழும் பெண்கள் வெளிப்படுத்தியுள்ளனர். பெண்கள் உடைமாற்ற, குளிக்க, உறங்க, குழந்தைகளுக்குப் பாலு}ட்ட தேவையான தனிப்பட்ட இடங்களை உறுதி செய்வதற்கான வழிவகைகள் குறைவாகவே உள்ளன. இடம்பெயர்க்கப்பட்ட மக்களை மீள இருத்தும்போது ஒவ்வொரு இருப்பிடத்திலும் பெண்களுக்கு மாத்திரமான குறிக்கப்பட்ட இடங்கள் அமைக்கப்பட வேண்டும் எனச் சிபார்சு செய்கிறோம்.

* முகாமிலுள்ள ஆண்கள் மத்தியில் மது பாவனை அதிகரித்திருப்படையிட்டுப் பெண்கள் கவலையடைந்துள்ளனர். இது பாலியல் தொந்தரவு, துஷ்பிரயோகம், வன்முறை என்பவற்றுக்கு வழிவகுக்கும் என அவர்கள் கருதுகின்றனர். குத்தகை மது பாவனை அதிகரிப்பு ஆண்களது ஆக்கபூர்வமான செயல் இழப்பு, அவர்களது வழக்கமான சமூகப் பாத்திரங்களை ஆற்ற முடியாத நிலைமை ஆகியவற்றுடன் தொடர்புடையது என்பதை நாம் அறிவோம். எனவே பாதுகாப்பு ஏற்பாடுகள் மூலம் பெண்கள் பாதுகாக்கப்படுவதற்கும். ஆண்கள் பயனுள்ள திருப்தி தரும் வேளைகளில் முகாம்களிலும், வெளியிலும் ஈடுபடுவதற்கும் வாய்ப்புத் தருவதன் மூலம் முற்தடுப்புப் பொறிமுறைகள் செயற்படுவதற்குமான வழிவகைகள் செய்யப்பட வேண்டும்.

* இடம்பெயர்க்கப்பட்டோர் உள்ள இருப்பிடங்களில் பெண்கள் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். பெண்களுக்கு வித்தியாசமான தேவைகள் உள்ளன. முகாம் வாழ்க்கை தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்படும்போது அவர்களது கருத்துக்கள் கணிக்கப்பட வேண்டும்.Ø பெண்களதும், பராயமடைந்த சிறுமிகளதும் இனப்பெருக்க சுகாதாரத் தேவைகளுக்கு விசேட அக்கறை செலுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு இருப்பிடத்திலும் கால ஒழுங்கான வைத்திய சேவைகள் - கிளினிக்குள் - கூடியளவு முடியுமானால் பெண் வைத்தியக் குழுவினால் பெண்களுக்கு மாத்திரம் நடத்தப்பட வேண்டும். கர்ப்பிணித் தாய்மார், பாலு}ட்டும் தாய்மாரின் தேவைகளுக்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.

* குழப்பம், பயம், வதந்திகளிலும், அதிகாரம் மிக்கோரிலும் தங்கியிருத்தல் ஆகியவற்றைத் தவிர்க்கும் வகையில் தெளிவாகவும் உரிய காலத்திலும் தகவல்கள் பெண்களுக்குக் கிடைப்பதற்கான ஒழுங்குகள் வேண்டும். குறிப்பாக பதிவு செய்தல், வைத்திய சேவைகள், கிளினிக்குகள், உணவுப் பங்கீடு, சட்ட நிலை, இழப்பீடு தொடர்பான விடயங்கள் முகாம்களின் எதிர்கால நிர்வாகத் திட்டம் பற்றிய தகவல்கள் அறிவுறுத்தல்களை இவை உள்ளடக்க வேண்டும்.

* சுனாமிப் பேரழிவால் மிக மோசமான இழப்புக்களைச் சந்தித்த பெண்களில் உளவியல் சமூக நல் நிலையில் மேற்கூறிய வழிவகைகளில் உடன்பாடான, சீரிய நன்மைகளை அளிக்கும் என்பதை நாம் வற்புறுத்துகிறோம். தீர்மானம் எடுக்கும் நிகழ்வுப் போக்குகளின்போது பெண்களின் அக்கறைகளுக்கு முக்கிய இடமளிப்பது அவர்களது சமாளிக்கும் திறன்களை அதிகரிப்பதுடன் இரண்டாந்தர உளவியல் அழிவையும் தடுக்கும்.
மேற்கூறிய சிபார்சுகளும். கருத்துக்களும், மனிதாபிமானப் பணிகளுக்கான வழிகாட்டல்கள், யு.என்.எச்.சி.ஆர் தராதரங்கள் இலங்கையின் பாதிக்கப்பட்ட ஏனைய பகுதிகளில் மேலெழும் விடயங்கள் ஆகியவற்றால் ஆதாரப்படுத்தப்பட்டடுள்ளன.

உள்ளுர் மாவட்ட hPதியாகத் தீர்மானம் எடுக்கும் அமைப்புகளில் வௌ;வேறு இருப்பிடங்களைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகளை உள்@ர் பெண் நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் சேர்த்துக் கொள்ளுமாறு கோருகிறோம். இதன்மூலமே பெண்களது கருத்துகளும் பெண்கள் நிறுவனங்களின் சேவைகளும் அரசாங்க அதிகாரிகளுக்கும் அளிக்கப்பட முடியும்.

Suriyas Plan of participation in reviving the community
The wide objective will be on
Identifying specific needs: Toilet facilities, Privacy, Clothing etc
Identifying specific problems regarding to discrimination/ Violence
And, ensuring womens participation in reconstruction at all levels.
Contact address:
Womens Coalition for Disaster Management-Batticaloa, e mail: wcdmbatti@yahoo.com
C/O Suriya Womens Development Centre, 20 Dias Lane, Batticaloa, Tel: +94-65-2223297, e mail: suriaw@slt.lk And
Prevention of Gender based Violence Project, CARE International No: 221, Bar Road, Batticaloa
List of Signatories

1. Suriya Womens Development Centre
2. Womens Development Forum
3. Prevention on Gender Based Violence Project Care International
4. Nertra Kirankulam
5. OXFAM Community Aid Abroad
6. OXFAM GB
7. Thirupperunthurai Community Development Organisation
8. Koralaipattu North Development Union
9. Peoples Welfare Association - Kiran
10. Campaign for Ending Violence Against Women Network
11. Working Womens Development Foundation
12. Womens Coexistence Committee- Foundation for Coexistence
(ஏற்கனேவே தவிவுகளிலும், தோழியர் வலைப்பதிவிலும் வெளிவந்தது இங்கே பதியபடுகிறது. நன்றி 'ஸ்விஸ்' றஞ்சி

Comments:
A geophysics professional points on a seismogram of an earthquake. A strong earthquake measuring 6.9 on the Richter scale hit the southern Philippines but there were no immediate reports of damage or casualties, the government said.(AFP/File /Michael Urban)

now..Sat Feb 5,10:34 AM ET
 
Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Site Meter