Saturday, January 15, 2005

 

மீன் சாப்பிடலும் மீனவர் மறுவாழ்வும்

இம்முறை திருக்கோணமலை போயிருந்தபோது அங்கே பலத்த சேதமடைந்த மூதூர், கிண்ணியா பிரதேசங்களுக்குச் செல்லக்கூடியதாக இருந்தது.

மூதூரி படகுத்துறையடியை அண்மித்த ஒரு மிகச்சிறிய தீவு போன்ற பரப்பில் மட்டும் 300 இற்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கிறார்கள்.
அதில் அறபு மத்ரசா ஒன்றில் பயின்றுகொண்டிருந்த சிறுவர்களும் அடக்கம்.

கிண்ணியாவில், தோணா பகுதியில் வைத்தியசாலை (கிண்ணியா பிரதான வைத்தியசாலை) முற்றாகவே சேதமடைந்திருக்கிறது.
அங்கே மொத்தம் அறுநூறுக்கும் மேற்பட்டவர்கள் இறந்துபோனார்கள்.

பொதுவாகவே தாக்கப்பட்டவை எல்லாம் கரையோரப்பகுதிகள் என்பதால் மீனவர்கள்தான் அதிக சேதத்துக்குள்ளாகியிருக்கிறார்கள்.

மீன்பிடி வள்ளங்களுக்கு காப்புறுதி எடுக்கவேண்டும் என்று கூட தெரியாத, தமிழ்நாட்டு, இலங்கை மீனவர்களும் இதிலடக்கம்.

மூதூர் கிண்ணியா பகுதியில் ஏதிலிகளாகியுள்ள ஏழை முஸ்லிம் மீனவர்களின் நிலை மிகப் பரிதாபகரமாகவுள்ளது.

அன்றாடம் கடலுக்குச் சென்றால்தான் சாப்பாடு என்ற நிலையில் வாழ்பவர்கள் அவர்கள்.

ஏழ்மை காரணமாகவே கரையோர மணலின் மேல் பாதுகாப்பற்ற குடியிருப்புக்களை அமைத்து வாழவேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏறபட்டுள்ளது.

சேதத்தின் அளவு மிகப்பெரிதாக இருப்பதற்கு, பாதுகாப்பற்ற கட்டட அமைப்புக்களே பிரதான காரணம்.

மறுவாழ்வு பற்றி பேசி, முனைப்புடன் செயலாற்றிக்கொண்டிருக்கும் இந்தநேரத்தில், மீனவர் மறுவாழ்வு பற்றிய எனது கவனிப்பு ஒன்றினை பகிர்ந்து கொள்கிறேன்.

இப்போது இங்கே கொழும்பில் கடைகளில் மீன் இல்லை.

யாரும் மீன் சாப்பிடுவதில்லை.
கருவாடும் படிப்படியாக சமையறைகளை விட்டு அருகிவருகிறது.

கொழும்பில் இருக்கும் இந்த நிலை, இலங்கை பூராகவும் மீன்பிடித்தொழிலுக்கு ஏற்பட்டுள்ள திடீர் வீழ்ச்சியை தெளிவாகவே காண்பிக்கிறது.

மீனவர்களுக்கு மறுவாழ்வழித்தலை, அரசாங்கமும், தொண்டு நிறுவனங்களும் மட்டும் எத்தனை நாட்களுக்கு செய்துகொண்டிருப்பது?
மீனவர்கள் வாழ்க்கையை முன்னரைவிட சிறப்பான நிலைக்கு கொண்டுவருதலே ஆக்கபூர்வமான மறுவாழ்வளிப்பாக இருக்கும்.

மீன்பிடித்தொழில் இவ்வாறு வீழ்ச்சிகண்டிருக்கும் போது அவர்கள் வாழ்வு வழமைக்கு எப்படி திரும்பும்.

மீன் சாப்பிடக்கூடாது என்ற மனநிலை, மூட நம்பிக்கைகளை அடிப்டையாகக்கொண்டதாகவே எனக்குப் படுகிறது.
இது பற்றி இத்துறைசார் வல்லுனர்களின் ஆலோசனை தேவைப்படுகிறது.

மீன் சாப்பிடலாம இல்லையா?

இந்தக்கேள்விக்கு, பொதுவான உயிரியல் மருத்துவ, மீன்பிடியியல் விளக்கங்களை விட , கள ஆய்வு முடிவுகளே பெறுமதியான பதிலாக இரூக்கும்.

இதற்கான ஏற்பாடுகளை யாராவது செய்ய முன்வருவார்களானால் நல்லது,

மீன்பிடிப்பிரதேசம் ஒன்றில் உள்ள மீன்களை ஆய்வு செய்து, அதனை பொதுமக்கள் சாப்பிடலாமா இல்லையா என்பதை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் பணி முன்னெடுக்கப்படவேண்டியுள்ளது,

இவ்வாறான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுமிடத்து ஊடகங்கள் நிச்சயமாக நல்ல ஒத்துழைப்பினைத்தரும்.

மீன்சாப்பிடலாம் என்ற முடிவு பெறபடுமிடத்து அதனை ஊடகங்கள் வாயிலாக பரப்புரைக்கலாம்.

மீனவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் பணிகளில் முதன்மையானதாக இதனைச் செய்வது ஆக்கபூவமானது. அவசரமானது.

இலங்கைக்குமட்டுமல,
சுனாமியால் பாதிக்கப்பட்ட அனைத்து கரையோர நாடுகளுக்கும்.
Comments:
ஆமாம், மீனவர்கள், அரசங்கமோ அல்லது வேறு யாரோ கையை எதிர்பார்த்து நிற்பதைவிட, பழைய வாழ்நிலையை மீண்டும் அடைவதே, முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும். இது போன்ற பார்வைகள் முக்கியமானது.

வாருங்கள், தொடர்ந்து எழுதுங்கள்!
 
உண்மையிலேயே இது சிந்திக்க வேண்டிய கோணம். சென்னையிலேயே, சில மருத்துவர்கள் மற்றும் சில மீனவ அமைப்பைச் சார்ந்தவர்களும் இத்தகைய ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்து மீன் மற்றும் மீனினாலான உணவுகளை உண்டு காட்டினார்கள். இது எத்தனை பேரின் சிந்தனையை மாற்றியிருக்கும் என்பது யோசிக்கவேண்டிய ஒன்று.

மீன் உண்ணாமை அல்லது மீனினாலான உண்வுப் பொருள்களை மறுத்தல் என்பது மறைமுகமாக, மீனவர்களின் வாழ்வியலிருத்தல் என்பதை கேள்விக்குள்ளாக்கும் என்பதை நான் உணர வேண்டும். இதைத் தவிர, மயூரனின் ஊடகங்களின் ஒத்துழைப்ப என்ற கருத்து வரவேற்க்கத்தக்க ஒன்று.
 
Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Site Meter