Wednesday, January 12, 2005

 

தத்தெடுப்பது சாத்தியமா?

சுனாமியால் பாதிக்கப்பட்டு ஆதரவற்றவர்களாக விட்ட குழந்தைகளை தத்தெடுப்பது குறித்து இணைய நண்பர்கள் சிலர் கேட்டிருந்தார்கள். நடைமுறையில் தத்தெடுப்பதில் சில சிரமங்கள் இருப்பது உண்மைதான். இதுகுறித்து என்டிடிவி ஒரு செய்தி தொகுப்பை வெளியிட்டிருந்தது. ஒரு சமூக சேவகி, இந்தியாவில் சாதாரணமாக பின்பற்றப்படும் நடைமுறைகளை பற்றி விளக்கமாக சொல்லியிருந்தார்.

தத்தெடுப்பவர் தனக்குரிய குழந்தையை தேர்வு செய்தவுடன் ஆறுமாதம் காலம் வரை காத்திருக்க வேண்டுமாம். இந்த ஆறுமாத காலத்திற்குள் தத்தெடுப்பவரின் ஆண்டு வருமானம், சொத்து போன்றவற்றை தாக்கல் செய்தாக வேண்டும். ஓரே சமயத்தில் ஓரு குழந்தை மட்டுமே தத்தெடுத்துக்கொள்ள அனுமதி. ஓன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளென்றால் வெவ்வேறு இடைவெளிகளில் தத்தெடுக்கலாம். அதுவும் ஓரே பாலினத்தை சேர்ந்த குழந்தைகள் அனுமதிக்கப்பட மாட்டாது.

மயிலாடுதுறையில் நிவாரணப் பணியிலிருக்கும் எனது நண்பரை தொடர்பு கொண்டு கேட்டேன். மயிலாடுதுறை பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். தற்போது சீர்காழி வட்டம் பெருந்தோட்ம் பகுதி கடலோர பகுதிகளில் சிறப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை நாகை மாவட்டத்தில் 54 குழந்தைகள் ஆதரவற்றவர்களாக்கப் பட்டிருக்கிறார்கள் என்று அவரது அலுவலகத்து குறிப்பு தெரிவிக்கிறதாம். இதில் மூன்று பெண் குழந்தைகள்.

நாகப்பட்டின மாவட்டத்து ஆதரவற்றோர் குழந்தைகளை வைத்து புதிதாக 'குழந்தை இல்லம்' உருவாக்கப்பட்டிருக்கிறது. இதிலிருக்கும் குழந்தைகளை தத்தெடுக்க நாகப்பட்டின மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலகத்தை அணுகியாக வேண்டும். இது நாகப்பட்டினம் கலெக்டர் ஆபிஸ் வளாகத்திலேயே அமைந்துள்ளது. இதன் பொறுப்பு அதிகாரி திருமதி. சூர்யகலா. தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண் - 253045.

பெரம்பலூரை சேர்ந்த நண்பர் ஒருவர் ஆண்குழந்தையை தத்தெடுக்க விண்ணபித்துள்ளார். அவரையும் தொடர்பு கொண்டு விசாரித்து விட்டு விரிவாக எழுதுகிறேன்.

Comments:
விரிவாக எழுதுங்கள். அதற்குள் சாகரன் எழுதிய ஒரு பதிவை வெளியிடுகிறேன். இன்னும் ஒரு மணி நேரத்தில்
 
ராம்கி, நீங்கள் சொல்வதைப் பார்க்கும் போது நடைமுறையில் பல சிரமங்கள் உள்ளது என தோன்றுகிற்து. தத்தெடுப்பவர் அதே நாட்டை சேர்ந்த்வராக இருக்க வேண்டுமா (Indian?)? தத்தெடுப்பவர் அயல் நாட்டில் இருந்தால் வழிமுறைகள் என்னென்ன ? அயல் நாட்டினினர் தத்தெடுக்க் அனுமதி உண்டா ? இங்கே வலைப்பதிவாளர்களில் யாரேனும், வழக்கறிஞர்கள் உள்ளனரா ?

இன்னும் ப்ல கோணங்களில் இதில் உள்ள சாதக், பாதகங்களை பார்த்தல் நலம் எனத் தோன்றுகிறது.
 
கண்டிப்பாக நிறைய சிரமங்கள் உண்டு. NRI என்றால் நிறையவே தோண்டுவார்கள். மும்பையை சேர்ந்த ஒரு வழக்கறிஞர் மரத்தடி குழுமங்களில் தீவிரமாக இருந்ததாக ஞாபகம். அவரை யாராவது தொடர்பு கொள்ள முடியுமா?
 
இதயபூர்வமாகவும் உணர்ச்சிபூர்வமாகவுமே இப்பிரச்சனையை அணுகக்கூடாது. உளவியலார் கருத்துப்படி சிறார்கள் தங்கள் பெற்றோரை இழந்து மனநிலை பாதிக்கப்பட்டிருக்கும் போது, அவர்களை புலம் பெயர்த்து வாழும் சூழலை முற்றும் மாற்றினால் சாதகங்களைவிட பாதகன்களே அதிகமாகும். உடன்பிறப்புக்களையும் நண்பர்களையும் தத்து எடுத்துப் பிரிப்பது, அவர்களை வாழ்க்கையினின்றும் ஒட்டாது இருக்கச் செய்யும். அவர்கள் இருக்கும் சூழலிலேயே அவர்களின் நல்வாழ்விற்க்கு அடிகோணலாம், கல்விச் செலவு, பராமரிப்புச் செலவு என்பன போல.
 
Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Site Meter