Wednesday, January 12, 2005

 

தத்தெடுக்க!

(தத்து எடுப்பது தொடர்பான பெயரிலியின் பதிவை முக்கியமானதாக பார்கிறேன். இதை ஒத்த குழப்பங்கள் எனக்கும் உண்டு. பெயரிலி எழுப்பியுள்ள ஐயங்கள் தீவிரமாய் விவாதிக்கபட வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த விஷயத்தில் மிகுந்த நிதானத்தையும் பொறுமையையும் மனதில் கொண்டு
செயல்பட வேண்டும் என்று நினனக்கிறேன்.

முக்கியமாய் "தத்தெடுத்தலுக்கும் முன்னதாக நிச்சயப்படுத்திக்கொள்ளவேண்டிய அவசரகாரியமாக குழந்தைகளின் உளநிலையை உலகோடு மீண்டும் ஒட்டிக்கொள்ள வைக்கும்வண்ணம் மீளமைவு செய்தலும் அப்படியான இடைக்காலத்திலே பொருளாதாரரீதியிலே அவர்களின் தேவைகளை நிறைவு செய்தலுமே மிகவும் முதன்மையாகின்றன. விரும்பினால், தத்து எடுத்துக்கொள்ள விரும்புகின்றவர்கள், தாம் தத்து எடுத்துக் கொள்ள வாய்ப்புள்ள குழந்தைகளோடு தொடர்புகளை ஏற்படுத்திப் பேணிக்கொள்ளலாம்; அக்குழந்தைகள் தற்காலிகமாக வாழும் சூழ்நிலையிலே அதன் நிலையை மேம்படுத்த சிறிது காலத்துக்கு வசதிகளைப் பொருளாதார நிலையிலே (அக்குழந்தைகளைப் பாதுக்காக்கும் நிறுவனங்களூடாக) ஏற்படுத்த உதவலாம். காலப்போக்கிலே, குழந்தைகளை அவை ஏற்கனவே அறிந்த உணர்ந்த இரத்த உறவுகளிலே யாராவது தத்து எடுக்காத நிலையும் குழந்தைகள் உணர்வுநிலையிலும் தத்தெடுக்கவிரும்புவோரோடு பிணையுற்ற நிலையிலும் தத்துக்கொள்வது சிறப்பானதாகுமென்று படுகின்றது. " என்று சொல்வதை மனதில் கொண்டு செயல்படவேண்டும் என்று நினைக்கிறேன்.

தகவல்ரீதியாய் தட்ஸ்டமில்.காமிலிருந்து கீழகண்டதை இங்கே பதிகிறேன் -ரோஸாவசந்த்.)

சுனாமியால் பாதிக்கப்பட்டு குடும்பத்தை இழந்து அநாதைகளாகி விட்ட குழந்தைகளைத் தத்து கொடுக்கும் பணியை தமிழக அரசின் சமூக நலத்துறை இன்னும் தொடங்கவில்லை.

இதற்கான அனுமதியை அரசு வழங்கியபின், தமிழகத்தில் தத்து கொடுப்பதற்காக அரசால் அங்கீகரிப்பட்ட 22 சமூக அமைப்புகள் மூலம் சுனாமியால் அநாதரவான குழந்தைகளைத் தத்தெடுக்க முடியும்.

தமிழகத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டு 12,000 பேர் பலியாகியுள்ளனர். இதில் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள், தங்களது பெற்றோர், குடும்பத்தினரை இழந்து அநாதைகளாகியுள்ள.

இக் குழந்தைகளை அரசே தத்தெடுத்து வருகிறது. இக் குழந்தைகளுக்காக நாகை, கடலூர், கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் காப்பகங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைத் தத்தெடுக்க நூற்றுக்கணக்கான மக்கள் முன் வந்தவண்ணம் உள்ளனர். தத்தெடுப்பது எப்படி, யாரை அணுக வேண்டும், முறைகள் என்ன என்ற கேள்விகளோடு பல இமெயில்கள் நமக்கு வந்தவண்ணம் உள்ளன.

தத்தெடுப்பது எப்படி என்பது குறித்து சமூக நலத்துறை உதவி இயக்குனர் மலர்விழியிடம் கேட்டபோது,

சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைத் தத்து கொடுப்பது குறித்து அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. அதே நேரத்தில் தத்து கொடுக்கலாம் என்ற முடிவை அரசு எடுக்கும்பட்சத்தில் அதை தமிழகத்தில் உள்ள 22 அமைப்புகள் மூலம் அரசு அமலாக்கும் என்றார்.

அவற்றின் விவரம்:

1.கில்டு ஆப் சர்வீஸ், 32, காஜா மேஜர் தெரு,
எழும்பூர், சென்னை8.
தொலைபேசி: 04428268565.
(இங்கு உள்நாட்டினர், வெளிநாட்டினர் தத்தெடுக்கலாம்)

2. கர்ணப் பிரியாக் டிரஸ்ட், 7, ராஜகிருட்டிணா ராவ் சாலை, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை 18. தொலைபேசி: 04424355182. (இங்கு உள்நாட்டினர், வெளிநாட்டினர் தத்தெடுக்கலாம்)

3. இன்ஸ்டிடியூட் ஆப் பிரான்சிஸ்கேன் மிஸ்ஸனரிஸ் ஆப் மேரி சொசைட்டி,
3, ஹோலி அப்போசல்ஸ் கான்வென்ட், பரங்கி மலை, சென்னை 16. தொலைபேசி: 04422345526 (இங்கு உள்நாட்டினர், வெளிநாட்டினர் தத்தெடுக்கலாம்)

4. கன்கார்ட் ஹவுஸ் ஆப் ஜீசஸ், சி 23, அண்ணா நகர் கிழக்கு, சென்னை 40. தொலைபேசி: 04426202498. (இங்கு உள்நாட்டினர், வெளிநாட்டினர் தத்தெடுக்கலாம்)

5. கிறிஸ்ட் ஃபெய்த் ஹோம் பார் சில்ரன், 3/91, மேட்டு காலனி, மணப்பாக்கம், சென்னை16. தொலைபேசி: 0442520588. (இங்கு உள்நாட்டினர், வெளிநாட்டினர் தத்தெடுக்கலாம்)

6. பாலமந்திர் காமராஜ் டிரஸ்ட், 126, ஜி.என்.செட்டி சாலை, தி.நகர், சென்னை17. தொலைபேசி: 04428267921. (இங்கு உள்நாட்டினர் மட்டும் தத்தெடுக்கலாம்).

7. மிஷனரிஸ் ஆப் சேரிட்டி, நிர்மலர் சிசு பவன், 79, வெஸ்ட் மாதா சர்ச் சாலை, ராயபுரம், சென்னை 13. தொலைபேசி: 04425956928. (உள்நாட்டினர் மட்டும் தத்தெடுக்கலாம்).

8. கலைச்செல்வி கருணாலயா சோசியல் வெல்பேர் சொசைட்டி, 3/பிபி1, மேற்கு முகப்பேர், சென்னை58. தொலைபேசி: 04426257779. (உள்நாட்டினர் மட்டும் தத்தெடுக்கலாம்)

9. மதராஸ் சோசியல் சர்வீஸ் கில்ட், 3/74, நெடுங்குன்றம், வண்டலூர், சென்னை98. தொலைபேசி: 04422378301. (உள்நாட்டினர் மட்டும் தத்தெடுக்கலாம்)

10. வாலண்டரி கோ ஆர்டினேட்டிங் ஏஜென்சி, 5, 3வது மெயின்ரோடு (மேற்கு), ஷெனாய் நகர், சென்னை 30. தொலைபேசி: 04426288677.

11.கிரேஸ் கென்னட் பவுண்டேஷன், 34, கென்னட் சாலை, மதுரை 1. தொலைபசி: 04522601767 (உள்நாட்டினர் மற்றும் வெளிநாட்டினர் தத்தெடுக்கலாம்).

12. பேமிலிஸ் பார் சில்ரன், 107, வள்ளலார் தெரு, போத்தனூர், கோவை. தொலைபேசி: 04222874235 (உள்நாட்டினர் வெளிநாட்டினர் தத்தெடுக்கலாம்).

13. காங்கிரகேசன் ஆப் தி சிஸ்டர்ஸ் ஆப் தி கிரேஸ் ஆப் சேவ்நாட், தபால் பெட்டி எண் 395, பழைய குட்ஷெட் தெரு, தெப்பக்குளம், திருச்சி 2. தொலைபேசி: 04312700923.

14. செயின்ட் ஜோசப் சாரிட்டி இன்ஸ்டிடியூட், அடைக்கலபுரம், தூத்துக்குடி மாவட்டம். தொலைபேசி: 04639245248. (உள்நாட்டினர் மட்டும் தத்தெடுக்கலாம்).

15. ஆனந்தா ஆசிரமம், தேன்கனிக்கோட்டை சாலை, எச்.சி.எப். போஸ்ட், மத்திகிரி, ஓசூர்635110. தொலைபேசி: 04344262324. (உள்நாட்டினர் மட்டும் தத்தெடுக்கலாம்).

16. கஸ்தூரிபா மருத்துவமனை, காந்திகிராமம், திண்டுக்கல்624302.
தொலைபேசி: 04512452328. (உள்நாட்டினர் மட்டும் தத்தெடுக்கலாம்).

17. கிளாரிட்டன் மெர்சி ஹோம், அழகு சிறை, பொன்மங்கலம் போஸ்ட், திருமங்கலம், மதுரை. (உள்நாட்டினர் மட்டும் தத்தெடுக்கலாம்)

நாகப்பட்டிணம்:

18. அவ்வை வில்லேஜ் வெல்பேர் சொசைட்டி, கீழ் வேளூர், நாகப்பட்டனம். தொலைபேசி: 043366275559. (இங்கு உள்நாட்டினர் மட்டும் தத்தெடுக்கலாம்)

19. திருநெல்வேலி சோஷியல் சர்வீஸ் சொசைட்டி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம். தொலைபேசி: 04622578282. (உள்நாட்டினர் மட்டும் தத்தெடுக்கலாம்)

20. லைப்லைன் டிரஸ்ட், 8 இ, ரகுராம்காலனி, சேலம். தொலைபேசி: 04272317147. (உள்நாட்டினர் மட்டும் தத்தெடுக்கலாம்)

21. புவர் எக்கானமி அன்ட் சில்ரன் எஜுகேஷனல் சொசைட்டி, 70, 3வது தெரு, சிவாஜி காலனி, இடையர்பாளையம் போஸ்ட், கோவை. தொலைபேசி: 04222646225, 2405137. (உள்நாட்டினர் மட்டும் தத்தெடுக்கலாம்)

22. உமன் ஆர்கனைசேஷன் பார் ரூரல் டெவலப்மென்ட், பிபி எண்1, பாண்டமங்கலம் போஸ்ட், பி.வேலூர், நாமக்கல் மாவட்டம். குழந்தைகள் தத்தெடுப்புப் பிரிவு, 32, ஏ நார்த் தெரு, பொத்தனூர் போஸ்ட், பி.வேலூர், நாமக்கல் மாவட்டம். தொலைபேசி: 04268230960. (உள்நாட்டினர் மட்டும் தத்தெடுக்கலாம்)


கடலூரில்:

கடலூர் மாவட்டத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட குழந்தைகள் தத்து கொடுப்பு நிறுவனங்கள் எதுவும் இல்லை.

தத்தெடுக்க விரும்புவோர் கீழ்கண்ட தொலைபேசி எண்களில் மாவட்ட கலெக்டர் ககன்தீப் சிங்கை தொடர்பு கொள்ளலாம். 04142230999, 04142230651 tணி 54, 04142230666

தத்தெடுப்பதற்கான விதி¬முறைகள்:

யார் தத்தெடுக்கலாம்?

திருமணமான தம்பதியினர்.

தனி நபர்கள் (விதவைப் பெண்கள், திருமணமாகாதவர், சட்டப்படி விவாகரத்துப் பெற்றவர்கள்).

தத்தெடுக்க விரும்பும் பெற்றோரின் ஒட்டு மொத்த வயது (கணவன், மனைவி) 85க்கு மிகாமலும், இதில் ஒருவரின் வயது 45க்கு மிகாமலும் இருக்க வேண்டும். (12 மாதத்திற்குள் உள்ள குழந்தையைத் தத்தெடுத்தால்).
தத்தெடுக்க விரும்பும் நபருக்கும், தத்தெடுக்கப்படும் குழந்தைக்கும் இடையே 21 வயது வித்தியாசம் இருக்க வேண்டும்.

தத்தெடுப்பதற்குத் தேவையான சான்றிதழ்கள்

1.தத்தெடுக்க விரும்பும் தம்பதியினரின் வயது சான்றிதழ்.

2.திருமணச் சான்றிதழ்.

3.வருமான சான்றிதழ்.

4.உடல் நலம் குறித்த மருத்துவச் சான்றிதழ்.

5.தம்பதியினர் சமீபத்தில் சேர்ந்து எடுத்துக் கொண்ட வண்ணப் புகைப்படம்.

6.சொத்து மற்றும் சேமிப்பு பற்றிய ஆவணங்கள்.

7.நன்கு அறிமுகமான 3 நபர்களிடமிருந்து கடிதங்கள்.

8.பெற்றோருக்குப் பின் குழந்தையைப் பராமரிக்கப் போகும் 2 நபர்களிடமிருந்து கடிதங்கள்.

மேலும், தத்தெடுப்பதில் தம்பதிகளுக்குள்ள ஆர்வம், கருத்து ஒற்றுமை, உடல் நலம் மற்றும் மன நலம், பொருளாதாரசமூகப் பின்னணி, குழந்தையை வளர்க்கும் திறன் ஆகியவை தத்துக் கொடுத்தலில் முன்னுரிமை அளிக்கப்படும்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைத் தத்தெடுக்க விரும்புவோர் மேல் கூறப்பட்ட அமைப்புகளைத் தொடர்பு கொண்டு முதலில் விண்ணப்பம் தாக்கல் செய்து கொள்ள வேண்டும்.

நன்றி: தட்ஸ்டமில்.காம்

Comments:
நீண்டநாட்கள் நான் பார்வையாளனாக மட்டும் இருந்து வரும் மடற்குழு

http://groups.yahoo.com/group/TamilNaduAdoptions/

இங்கு நாம் சுனாமி பேரிழப்பின் தொடர்பான தத்தெடுத்தல் பற்றி எழுதலாமா..?

~வாசன்
vaasusஅட்ஜிமெயில்.காம்
 
அன்புள்ள வாசன்,

எழுதுங்கள். உங்கள் கருத்தை பதியுங்கள்.
 
வாசன், நீங்கள் அந்த யாஹு குழுமத்தில் 'நாம்' எழுதுவதை பற்றி சொல்கிறீர்களா? அல்லது இங்கே நீங்கள் எழுதுவது குறித்து சொல்கிறீர்களா? இரண்டுக்கும் பதில் 'ஓகே'!

முதலாவது அங்கே எனது பெயரை பதிய போகிறேன், நண்பர்களும் பதிவு செய்யலாம். அது சில சிக்கல்களை புரிந்துகொள்ள, தத்து எடுத்தபின் எதிர்கொள்ள வேண்டியவைகள் பற்றி புரிந்துகொள்ள உதவும்.

இங்கே எழுத விரும்பினாலும் (எல்லோருமே) rksvasanth@yahoo.com என்ற எனது முகவரிக்கோ, நரைன், பத்ரி, ரஜினி ராம்கி போன்ற உறுப்பினர்களுக்கு ஒரு வார்த்தை எழுதிபோடலாம். நன்றி!
 
ரோ.வ:

குழப்பிவிட்டேன்.மடற்குழுவில் பங்கு பெறுவதைதான் சொல்ல விரும்பினேன்.இம்மாலை மடற்குழுவில் எழுதப் பார்க்கிறேன்.இம்மடற்குழு உறுப்பினர்கள் பலரும் ஐரோப்பியர் என நினைக்கிறேன்.

நன்றி.

~வாசன்
 
நன்றி, நானும் இப்போது உறுபின்னனானேன்.
 
Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Site Meter