Wednesday, January 12, 2005

 

குழந்தைகள் தத்து தொடர்பான சில தகவல்கள்.

(ரஜினி ராம்கியின் சென்ற பதிவை தொடர்ந்து, தத்து எடுப்பது தொடர்பாக, சாகரன் தனது வலைப்பதிவில் எழுதியது இங்கே மீண்டும் பதியபடுகிறது-- ரோஸாவசந்த்.)

ஆதரவற்ற அனாதைக் குழந்தைகளை தத்து எடுத்துக்கொள்ள அரசே முன் வந்திருப்பதாக இணையத்தில் செய்தி.

முதல்வர், 'விருப்பமுள்ளவர்கள் தத்து எடுத்துக்கொள்ளலாம், சில விதிமுறைகளுக்குட்பட்டு.. விதிமுறைகள் தமிழக சோசியல் வெர்பேர் தளத்தில் விளக்கப்பட்டிருக்கிறது.' என்று சொன்னதாக பத்திரிக்கைச் செய்திகள்.

அந்தத் தளத்தில் சென்று பார்த்த போது.....

1) ஹோம் ரிப்போர்ட் - நம் வீட்டிற்கு ஒருவர் வந்துவிபரங்கள் கேட்டுச் செல்வார்.

2) நம் விருப்பப்படி, குழந்தையின் போட்டோ அனுப்பி வைக்கப்படும்.

3) பிடித்திருப்பின், நேரில் பார்க்க ஏற்பாடு செய்யப்படும்

4) பிடித்திருப்பின், மற்ற வேலைகள் செய்யப்படும்.

இவற்றிற்கெல்லாம் குறைந்தது 3 மாதங்களாவது எடுக்கும்..

விளக்கத்தின் நடுவில், சில விடயங்கள், ஹிந்து லா-வின் படி, அடாப்ட் செய்ய முடியும். முஸ்லீம் அல்லது கிருஸ்துவராக இருந்தால், கார்டியனாக முடியும். என்று இருந்தது. (இந்துவாக இருந்தாலும், கார்டியனாக இருப்பது எப்படி?)
என்.டி.டி.வி பேட்டியில், ஹிந்து லா-வின் படி, உங்களுக்கு ஆண்குழந்தை முன்னரே இருந்தால் பெண்ணும், பெண்குழந்தை முன்னரே இருந்தால் ஆண் குழந்தையுமே தத்து எடுக்க அனுமதிக்கப்படும் என்று ஒரு விபரம் சொல்லியிருந்தார்களாம். (இது போன்ற சட்டங்களைத் தெளிவாகச் சொல்லும் இணையதளம் உண்டா?)

கூடவே அண்ணா யுனிவர்சிடி ஆதரவற்ற குழந்தைகளின் விபரங்களுடன் ஒரு தளம் அமைத்திருப்பதாக ஒரு செய்தி மாலைமலரில்... ( ஆனால் அப்படி ஒரு தளம் எங்கிருக்கிறது?! :-( )

சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை தத்து எடுப்பது தொடர்பான விபரங்களுக்கு, அந்தந்த மாவட்ட கலெக்டர்களையும் தொடர்பு கொள்ளலாம் என்று 'என்.டி.டி.வி' தகவல்.

குழந்தைகள் தத்து எடுப்பது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு...

இணையதளம் : http://www.tn.gov.in/adoption/

நேரடித் தொடர்பிற்கு:
Director - Social Welfare
Directorate of Social Welfare
Old Engineering College Complex
Chepauk, Chennai -600 005
Ph:- +91-44-28545745,
+91-44-28545748,
+91-44-28545728

Comments:
குழந்தைகளைத் தத்தெடுப்பதற்கான விதிகள், மற்ற தகவல்களுக்கு:
http://www.thatstamil.com/news/2005/01/05/child.html

என் தற்போதைய வசிப்பிடம் அயல்நாட்டில் இருப்பதால் இந்த தளத்தில் ஒரு பார்வையாளனாக இருந்து மட்டுமே கவனிக்க முடியும். நடைமுறை ரீதியாக (மாலன் பரிந்துரைத்ததைப் போல) என் பங்குக்கு ஏதேனும் செய்ய உத்தேசம். தமிழகத்தில் இருந்து எழுதும் நண்பர்களின் தொடர்ந்த விவாதமும், தகவல் பரிமாற்றமும் என் போன்றவர்களுக்கு பெருமளவில் உதவும்.

சுந்தரமூர்த்தி
 
Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Site Meter